உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழிலாளிக்கு மூளைச்சாவு உடல் உறுப்புகள் தானம்

தொழிலாளிக்கு மூளைச்சாவு உடல் உறுப்புகள் தானம்

கோவை: மூளைச்சாவு அடைந்த கூலித்தொழிலாளியின், உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், காசிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 34; வாழைக்காய் வெட்டும் கூலித்தொழிலாளி. கடந்த, 22ம் தேதி மாலை நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பலத்த காயம் ஏற்பட்டது. 23ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.அவரது பெற்றோர், ரங்கசாமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். தானமாக பெறப்பட்ட ஒரு கல்லீரல், சேலம் தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம், கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், கோவை தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. தானமாக பெறப்பட்ட உறுப்புகள், முன்னுரிமை அடிப்படையில் உரியவர்களுக்கு பொருத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ