| ADDED : நவ 16, 2025 12:48 AM
நன்கு படித்து வேலைக்கு செல்லாமல் இருக்கும் மனைவி, குடும்ப நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? நன்கு படித்து, வேலைக்கு செல்லாமல் இருக்கும் மனைவி, ஜீவனாம்சம் கேட்க முடியாது என்று ஐகோர்ட் அளித்த தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. வங்கியில் அடமானம் வைத்த வீட்டிற்கு,கடன்கட்டாததால் மூன்றாம் நபர் ஏலம்எடுத்துள்ளார். அவருக்கு வங்கி சார்பில், விற்பனை சான்றிதழ் கொடுத்துள்ளனர். கடன் வசூல் தீர்ப்பாயத்தில், இது சம்பந்தமாகவழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மூன்றாம் நபர் வாங்கிய விற்பனை சான்றிதழை ரத்து செய்ய, வீட்டு உரிமையாளர் எந்த கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்? ஒரு சொத்தின் உரிமையை சர்பாசி சட்டம், 2002ன் கீழ் முடிவு செய்ய முடியாது என்று பல தீர்ப்புகள் உள்ளன. அது, சிவில் கோர்ட் ஆள்வரைக்கு உட்பட்ட விஷயம் என்று, சர்பாசி சட்டத்தின் கீழ், கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், சொத்தின் உரிமையை பொறுத்து சிவில் கோர்ட் தான், சொத்தின் டைட்டிலை பொறுத்து முடிவு செய்ய முடியும் என்று, டில்லி ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. - வக்கீல் சண்முகம் ரேஸ்கோர்ஸ்.: