உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதர் சூழ்ந்த தொட்டி சுத்தம் செய்யப்படுமா?

புதர் சூழ்ந்த தொட்டி சுத்தம் செய்யப்படுமா?

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் தண்ணீர் தொட்டியை புதர் சூழ்ந்துள்ளது.கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில், குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இங்கு உள்ளவர்களின் தண்ணீர் தேவை, மேல்நிலை தொட்டி மற்றும் தரை மட்ட தொட்டி வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது.இப்பகுதியில், விநாயகர் கோவில் பின் பக்கத்தில் உள்ள தண்ணீர் தொட்டி பயன்பாட்டில் உள்ளது. ஆனால், தண்ணீர் தொட்டி அருகே அதிகளவு செடிகள் முளைத்து புதர் சூழ்ந்து காட்சியளிக்கிறது.மேலும், இங்கு பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் இருப்பதால், தண்ணீர் பிடிக்க வரும் மக்கள் அச்சப்படுகின்றனர். புதரை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை