உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொங்குநாடு மருத்துவமனை சார்பில் கேன்சர் விழிப்புணர்வு

கொங்குநாடு மருத்துவமனை சார்பில் கேன்சர் விழிப்புணர்வு

கோவை:கொங்குநாடு மருத்துவமனையின் சார்பில், உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு மராத்தான் நடந்தது. மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜு, மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் தலைமை வகித்தனர்.சந்திரயான் முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை மராத்தானை கொடியசைத்து, துவக்கி வைத்தார். கொங்குநாடு எம்.ஆர்.சென்டரில் துவங்கி, அத்திப்பாளையம் பிரிவில் அமைய உள்ள கொங்குநாடு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் முடிவடைந்தது. சுமார் 5 கி.மீ., நடந்த இந்த மராத்தானில், 15 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்து 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல் இரண்டாம், மூன்றாம் பரிசு முறையே, ரூ.10 ஆயிரம், ரூ.ஐந்தாயிரம், ரூ.மூன்றாயிரம் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்வில், கொங்குநாடு நர்சிங் கல்லுாரியின் நிர்வாக அறங்காவலர் ஆர்த்தி விஸ்வநாதன், கேன்சர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த், கேன்சர் மருத்துவ நிபுணர் டாக்டர் பிரபாகரன், டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் ரத்ன சபாபதி, விஸ்வநாதன் கன்ஸ்ட்ரக்சன் நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை