மேலும் செய்திகள்
கபடி போட்டியில் பி.ஏ. பள்ளி வெற்றி
14-Aug-2025
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே நடந்த சகோதயா சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான கேரம் விளையாட்டுப் போட்டியில், பிருந்தாவன வித்யாலயா பள்ளி அதிக புள்ளிகளை எடுத்து, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. காரமடை அடுத்த காந்திநகரில் உள்ள பிருந்தாவன வித்தியாலயா பள்ளியில், கோவை சகோதயா சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில், 150க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் பங்கேற்றனர். கேரம் போட்டிகளின் தேசிய நடுவர் கணேஷ் தலைமையில், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தினேஷ் குமார், விக்ரம் பயிற்சியாளர் ஆனந்த் மற்றும் ஆசிரியர்கள் போட்டிகளை நடத்தினர். இதில் பிருந்தாவன வித்தியாலயா பள்ளி அதிக வெற்றி புள்ளிகளை எடுத்து, முதலிடத்தை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைபெற்றது. ஸ்ரீவித்யா மந்திர் மற்றும் யுனைடெட் பப்ளிக் பள்ளி இரண்டாம் இடத்தையும், அக் ஷரம் இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் விஸ்வஷிஷ்ய வித்யாலயா மூன்றாம் இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகிகள் சம்பத்குமார், விமலா, அசோகன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். பள்ளி முதல்வர் சாரதா தேவி நன்றி கூறினார்.
14-Aug-2025