உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சத்யசாய் பாபாவின் நுாற்றாண்டு விழா

 சத்யசாய் பாபாவின் நுாற்றாண்டு விழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், சத்யசாய் பாபாவின் நுாற்றாண்டு விழா மற்றும் பிறந்த நாள் விழா நாளை நடக்கிறது. சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில், பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபா நுாற்றாண்டு விழா, பிறந்த நாள் விழா, பொள்ளாச்சி சத்யசாய் சேவாசமிதியில் நடக்கிறது. கடந்த, 16ம் தேதி ஓம்காரம், சுப்ரபாதம், பிரசாந்தி கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 11:00 மணிக்கு பாலவிகாஸ் குழந்தைகளின் திறன் போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து, சாய் பஜன், ேஹாமியோபதி மருத்துவ முகாம், மங்கள ஆரத்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சூளேஸ்வரன்பட்டியில், சாய்பஜன், மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் கோவிலில், திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. அதில், 81 மகளிர் பங்கேற்று வழிபாடு செய்தனர். இன்று காலை, 7:00 மணி முதல் ஆச்சிப்பட்டி சக்தி சாய்ராம் இல்லத்தில், சாய் பஜன், மாலை, 6:00 மணி முதல், 7:30 மணி வரை கதைப்பாடல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 23ம் தேதி காலை, 5:20 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், காலை, 11:00 மணிக்கு பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடை வழங்குதல், 11:30 மணிக்கு சுயம்வர பார்வதி கலா ேஹாமம், மதியம், 12:00 மணிக்கு சந்தான கோபால ேஹாமம், ஆயுள் விருத்தி ேஹாமம் நடக்கிறது. அன்று மாலை, 4:00 மணிக்கு மஹா நாராயண சேவை, மாலை, 5:30 மணிக்கு பாலவிகாஸ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், ஆனந்த வாழ்வு தரும் சாய்நாமம் சிறப்பு பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது. ஆந்திரா சத்யசாய் பல்கலை முன்னாள் மாணவர் சாஹந்தி சீனிவாச சுப்பாராவ் இசை நிகழ்ச்சியை வழங்குகிறார். மங்கள ஆரத்தி, ஊஞ்சல் உற்சவம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை