மேலும் செய்திகள்
மூன்று மாநிலங்களிலும் வெற்றி பெறுவோம்
1 minutes ago
கலெக்டர் ஆபீசுக்கு குண்டு மிரட்டல்
6 minutes ago
மாவட்ட எல்லையில் போலீஸ் செக்போஸ்ட் மாயம்
15 minutes ago
அரசுப்பள்ளி அருகே வேகத்தடை தேவை
16 minutes ago
கோவை: கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு கண்டிப்பாக கொண்டு வரும், என, தமிழ் மாநில காங்., தலைவர் வாசன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் வாசன் அளித்த பேட்டி: வாக்காளர் சீர்திருத்த பட்டியல் பற்றிய உண்மை நிலையை தெரிந்தும், தெரியாதது போல், எதிர்க்கட்சிகள் தி.மு.க., கூட்டணி கட்சிகள், மக்களை குழப்ப நினைக்கின்றன. தேர்தல் ஒரு மாநிலத்தில் நியாயமாக நடக்க வேண்டும். மக்கள் தாங்கள் விரும்பும் ஆட்சியாளர்களை, சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு எஸ்.ஐ.ஆர்., அவசியம். அந்த பணி தற்போது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, அ.தி.மு.க., தலைமையில் முதன்மை வெற்றி அணியாக உருவாகும். கூட்டணி உறுதியாகவும், பிரகாசமாகவும் இருக்கிறது. கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும். மெட்ரோ திட்டத்தை பொறுத்தவரையில், திட்டத்துக்கான கூடுதல் தகவல்களை மட்டுமே மத்திய அரசு கேட்டிருக்கிறது; திட்டத்தை மத்திய அரசு ஒருபோதும் முடக்காது. சென்னைக்கு மெட்ரோ திட்டத்தை, முதலில் கொண்டு வந்தவர் பிரதமர். தமிழக நலனில் அக்கறை எடுத்து செயல்பட்டு கொண்டிருக்கும் போது, பிரித்து பேசுவது சரியல்ல. இவ்வாறு, வாசன் தெரிவித்தார்.
1 minutes ago
6 minutes ago
15 minutes ago
16 minutes ago