உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செயின் திருடர்கள் சிறையில் அடைப்பு

செயின் திருடர்கள் சிறையில் அடைப்பு

சூலுார்; சூலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு பின்புறம் உள்ள சுகந்தி நகரை சேர்ந்தவர் தேவிகா, 67. கடந்த, மார்ச் 31ம் தேதி காலை, 8:00 மணிக்கு, பால் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர், மூதாட்டி அணிந்திருந்த தாலி செயினை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து சூலுார் போலீசில் அவர் புகார் அளித்தார்.வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர். நேற்று நீலம்பூர் பகுதியில் இருவரும் இருப்பது தெரிந்து, போலீசார் அங்கு சென்றனர். போலீசை கண்டதும் தப்பிக்க முயன்ற அவர்கள், பைக்கில் இருந்து கீழே விழுந்து, கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விசாரணையில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முபாரக் அலி, 32 மற்றும் புதியகுளம் பகுதியை சேர்ந்த பிரதீப்குமார், 23 என்பது தெரிந்தது. இருவர் மீதும் பல வழக்குகள் உள்ளன.இருவரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த, மார்ச் 29ம் தேதி சிறையில் இருந்த வெளியில் வந்த முபாரக் அலி, ஒரு நாள் கழித்து, சூலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும், அவர் மீது, 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை