உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மின்சார சட்டத்திருத்த மசோதா 2025 அமைச்சருக்கு வர்த்தக சபை பரிந்துரை

 மின்சார சட்டத்திருத்த மசோதா 2025 அமைச்சருக்கு வர்த்தக சபை பரிந்துரை

கோவை: மத்திய அரசின் 'மின்சார சட்டத் திருத்த மசோதா 2025' ஐ வரவேற்றுள்ள இந்திய தொழில் வர்த்தக சபை, அவற்றில் சில திருத்தங்களுக்கு சில ஆலோசனைகளை சமர்ப்பித்துள்ளது. இந்திய தொழில் வர்த்தக சபை கோவை செயலாளர் பிரதீப், மத்திய மின்துறை அமைச்சர் மணிஷ் மிஸ்ராவுக்கு அனுப்பியுள்ள கடிதம்: 'மின்சார திருத்தச் சட்ட மசோதா 2025' ஐ, இந்திய தொழில் வர்த்தக சபை வரவேற்கிறது. இந்த சீர்திருத்தங்கள், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக ரீதியான இழப்புகளைக் குறைத்து, நுகர்வோருக்கான தெரிவுகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இம்மசோதாவின் முக்கிய சில திருத்தங்கள் மீது, வர்த்தக சபையின் ஆலோசனைகளை பரிசீலனைக்கு முன்வைக்கிறோம். 43வது பிரிவு திருத்தம், வினியோக பொறுப்புடமையை பேசுகிறது. ஒரு மெகாவாட்டுக்கு மேல் தேவை அதிகரிக்கும்போது, அதைத்தரும் பொறுப்பில் இருந்து வினியோகஸ்தருக்கு விலக்கு அளிக்கிறது. இதுபோன்ற நிலையில், தேவைக் கட்டணம் விதிக்கப்படக்கூடாது. உற்பத்தித் துறைக்கு, தேவைக் கட்டணம் சீரமைப்பில், ஒப்பளிக்கப்பட்ட தேவை 80 சதவீதத்துக்கும் கீழ் 3 மாதங்களுக்கு மேல் தொடரும்போது, தேவைக் கட்டணமும் 80 சதவீதத்துக்கு மட்டுமே வரம்பாக நிர்ணயிக்கப்பட வேண்டும். சட்டப்பூர்வமான, பொருளாதார மற்றும் நேர்மையான காரணங்களின் அடிப்படையில் இது நியாயமான பரிந்துரை. குறைந்தது மூன்று முதல் ஏழுக்கு மிகாமல் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. கோவை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். இது, வழக்குகளை விரைவாக தீர்ப்பதுடன், நிலுவைகளைக் குறைத்து, நுகர்வோர் மற்றும் துறைசார் பங்குதாரர்களுக்கு நீதியை எளிதில் அணுக வழிவகுக்கும். சொந்த பயன்பாட்டுக்கான மின் உற்பத்தி ஆலை தொடர்பான பிரிவு 9 திருத்தத்தில், அரசுகளுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தவிர்க்க 'உரிய அரசு' என்பது 'மத்திய அரசு' எனக் குறிப்பிடப் பட வேண்டும்.இவற்றை, மசோதாவை இறுதி செய்யும்போது, மத்திய அரசு பரிசீலிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ