| ADDED : ஜன 11, 2024 11:33 PM
கோவை:வழக்கறிஞர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டியில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது. கோவை வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் கோவை வழக்கறிஞர்கள் சங்க கால்பந்தாட்ட குழு சார்பில் வழக்கறிஞர்களுக்கு இடையேயான முதலாம் ஆண்டு வென்னல் மற்றும் மனோகர் நினைவு கோப்பைக்கான கால்பந்து போட்டி தெலுங்குபாளையம் டி.எஸ்., அகாடமியில் நடந்தது. போட்டியை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக்குழுவின் தலைவர் நந்தகுமார் துவக்கி வைத்தார். ஏழு அணிகள் பங்கேற்ற இதன் இறுதிப்போட்டிக்கு சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்க அணியும், கோவை வழக்கறிஞர்கள் சங்க கால்பந்தாட்ட குழு அணியும் மோதின. பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை உயர்நீதி மன்ற அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி முரளிசங்கர் பரிசுகளை வழங்கினார். கோவை வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், கோவை வழக்கறிஞர் சங்க செயலாளர் திருநாவுக்கரசு, கோவை குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மருதுபாண்டியன், செயலாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனர்.