| ADDED : ஜூலை 01, 2024 01:30 AM
கோவை;தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம், வடவள்ளியில் உள்ள சக்தி காமாட்சி அம்மன் கோவில் அரங்கில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் பலராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஓய்வூதியர் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் மாவட்ட தலைவராக பலராமன், செயலாளராக சிங்காரவேலு, பொருளாளராக நாக ராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.சங்கத்தின் பொதுச்செயலாளர் கிருஷ்ணன் பேசுகையில், ''தமிழக முதல்வர், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை, உடன் நிறைவேற்ற வேண்டும். தேர்தல் மேடையில் ஓட்டுக்காக சொன்னால் மட்டும் போதாது. அதை நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதியர்கள் 70 வயது நிறைவு பெற்றவர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்,'' என்றார்.மாவட்ட நிர்வாகிகள் வனராஜன், ராஜகோபால், செல்வராஜ், கிருஷ்ணகுமார், கணேசன், பழனிச்சாமி, சுசிலா, கனகசாமி, பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.