உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பி.ஜி.வி. பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

 பி.ஜி.வி. பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. பள்ளியின் தாளாளர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். விழாவில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மாணவர்கள் தத்துரூபமாக, நாடகமாக அரங்கேற்றினர். கிறிஸ்துமஸ் குடில், மரம் போன்றவற்றை அழகாக வடிவமைத்தனர். ஆசிரியர்களும், மாணவர்களும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடி, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சுகந்தி ராணி, ஜெனிபர், ஜாக்குலின், ரஞ்சனி செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ