உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் முன்பதிவு மீண்டும் துவக்கம்!

கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் முன்பதிவு மீண்டும் துவக்கம்!

கோவை-பெங்களூரு 'வந்தே பாரத்' ரயிலுக்கான முன் பதிவு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியான பின், மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.கோவையிலிருந்து பெங்களூருக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். விமானம், ரயில்கள், அரசு பஸ்கள் மற்றும் கார்கள் போதாத நிலையில், ஒரு நாளுக்கு 120க்கும் அதிகமான ஆம்னி பஸ்கள், இங்கிருந்து பெங்களூரு செல்கின்றன. இதனால், கோவையிலிருந்து பெங்களூருக்கு இன்னும் அதிகளவில் ரயில்களை இயக்க வேண்டுமென்பது நீண்ட காலக் கோரிக்கையாகவுள்ளது.குறிப்பாக, இரவில், கோவையிலிருந்து புறப்பட்டு, காலையில் பெங்களூரு செல்லும் வகையில் ரயில் இயக்க வேண்டுமென்று, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இங்குள்ள தொழில் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இன்று வரை இரவு நேர ரயில் எதுவும் இயக்கப்படவில்லை. மாறாக, இங்கிருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட இரண்டு ரயில்கள், கேரளாவுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கோவையிலிருந்து பெங்களூருக்கு 'வந்தே பாரத்' ரயில் சேவை, கடந்த ஜன.,1ல் இருந்து துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இயக்கப்படும் 40 வந்தே பாரத் ரயில்களில், அதிகாலை 5:00 மணிக்கு புறப்படும் ஒரே ரயில் இதுதான்; அதேபோல, ஒரு மணி நேரத்துக்கு சராசரி 57 கி.மீ., என்ற அளவில், மிகவும் மெதுவாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலும் இது மட்டுமே.கட்டணமும் அதிகம்; பயண நேரமும் குறையவில்லை என்ற வருத்தம் இருப்பினும், இந்த ரயிலுக்கான தேவையும், வரவேற்பும் சிறப்பாகவே உள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கான 'புக்கிங்' பெருமளவில் நிரம்பி விட்டது. ஆனால் பிப்.,1ல் இருந்து இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு, கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.வழக்கமாக, 120 நாட்களுக்கு முன்பே, 'புக்கிங்' திறக்கப்படும் நிலையில், இந்த ரயிலில், 15 நாட்களுக்குப் பின் பயணம் செய்வதற்கு, டிக்கெட் முன் பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, இந்த ரயிலுக்கான முன் பதிவு நேற்று மதியமே மீண்டும் துவக்கப்பட்டது. ஆனால் பயண நேரம், புறப்பாடு எதுவும் மாற்றப்படவில்லை.இந்த ரயிலை, காலை 5:00 மணிக்குப் பதிலாக காலை 6:10 மணிக்குப் புறப்படும் வகையிலும், பெங்களூரில் இருந்து மதியம் 1:40 மணிக்கு, கோவைக்குப் புறப்படுவதற்குப் பதிலாக மதியம் 2:30 மணிக்குப் புறப்படும் வகையிலும் நேரத்தை மாற்ற வேண்டும்; பயண நேரத்தை 6 மணி நேரம் 40 நிமிடங்கள் என்பதை, 5 மணி நேரம் 45 நிமிடம் என குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை, மேலும் வலுத்து வருகிறது. -நமது சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rudhran
ஜன 21, 2024 15:38

Nandraga பார்க்கவும். CBE BNC VB full ah lam pogala. Daily 200 to 300 seats available ah tha iruku. Better intha train ah Trichy to banglore vita nalla poirukum.


CBE CTZN
ஜன 20, 2024 22:31

தினமலருக்கு நன்றி... இதே போல் கொங்கு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் இரவு நேர தொடர் வண்டி ஒன்றினை கூடிய விரைவில் முடிந்தால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வரும் முன் மத்திய அரசு அறிவிக்கும் வகையில் முக்கியத்துவத்தை உணர்த்தும் கட்டுரை வெளியிட்டு அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்


RADE
ஜன 20, 2024 13:57

கேரளத்து kaa ரனுக செய்ய மாட்டாங்க


Balaji Gopalan
ஜன 20, 2024 12:49

கோவை இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ் எதற்காக எர்ணாகுளம் வரை நீடித்தார்கள் .. கோவை கோட்டா பறிபோனது


Gopalan
ஜன 20, 2024 09:24

Several people are writing about the slow speed of this train. the track via Salem Dharmapuri,Hosur is not geared up for high speed. Vandhe Bharat express between CBE and MDS covers the distance of 498 kms in less than 6 hours(5hrs 50mints).Then the 380 kms between CBE and BLR should be covered in less than 5 hrs.if the track is not fit for semi high speed of 100 kms better shift the route via Salem Kuppam where the track is certified for 100kms if not more


Ramesh Sargam
ஜன 20, 2024 06:47

இந்தியாவில் எவ்வளவு ரயில் விட்டாலும் போதாது.


Ram
ஜன 20, 2024 06:21

அவசரகதியில் செய்தல்


VENKATASUBRAMANIAN
ஜன 20, 2024 04:56

ஆமாம் நேரம் குறைந்தால் வரவேற்பு கூடும்


மேலும் செய்திகள்