உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலைவாழ் மக்கள் பிரச்னை தீர்க்க வருவாய்த்துறை உறுதி

மலைவாழ் மக்கள் பிரச்னை தீர்க்க வருவாய்த்துறை உறுதி

ஆனைமலை : ஆனைமலை ஒன்றியம் காளியாபுரம் ஊராட்சி செல்லபிள்ளை கரடு பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் பிரச்னைகளை தீர்க்க வருவாய் கோட்டாட்சியர் உறுதியளித்துள்ளார்.ஆனைமலை அடுத்த செல்லப்பிள்ளைகரடு பகுதியில் பட்டா இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மலைவாழ் மக்களின் 27 குடிசைகள் கோர்ட் உத்தரவுப்படி கடந்த 20ம் தேதி போலீசார் மற்றும் வருவாய்துறையினரால் அகற்றப்பட்டது.கடந்த 22ம் தேதி மலைவாழ் மக்கள் ரோட்டில் சமையல் செய்து போராட்டம் நடத்தினர்.

தங்களுக்கு அப்பகுதியிலேயே மாற்று இடம் வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தனர்.இதுபற்றி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி கூறியதாவது: வருவாய்துறையினர் சென்றால் செல்லபிள்ளைகரடு மக்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. வருவாய் துறை அதிகாரிகள் சென்றால் அவர்கள் பிரச்னைகள் பற்றி கூறுவதில்லை.என்னிடம் பிரச்னைகளை தெரிவித்தால் அதை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன். அவர்களுக்கு வீட்டுமனை, ஜாதிச்சான்றிதழ் உள்ளிட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும் கூறலாம். வீட்டுமனை இல்லாதவர்களுக்கு மாற்று இடத்தில் வீட்டுமனைகள் வழங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ