மேலும் செய்திகள்
ரூ.1.50 கோடி சொத்து அபகரித்த தம்பதி கைது
3 hour(s) ago
இன்றைய மின் தடை பொள்ளாச்சி
21 hour(s) ago
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்; விழிப்புணர்வு முகாம்
21 hour(s) ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், அரசு உதவி வேண்டி மாற்றுத்திறனாளி ஒருவர் மனு கொடுத்தார்.பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் மீனா பிரியாதர்ஷினி தலைமையில் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்கியதும், மாற்றுத்திறனாளி ஒருவர் தவழ்ந்து வந்து மனு கொடுத்தார்.'தனக்கு ஒரு கால் இல்லாததால், இலவசமாக மூன்று சக்கர சைக்கிள் வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்க வேண்டும். இதுவரை மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கவில்லை' என்று மனு கொடுத்தார். மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் உறுதியளித்தார்.அதையடுத்து, பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் காலனியில் வசிக்கும் திருநங்கைகள் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு கொடுத்தனர். முகாமில், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை கேட்டு அதிகளவில் மனுக்கள் வந்திருந்தன.
3 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago