உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோயம்புத்துார் விழா 2025 லோகோ அறிமுகம்

கோயம்புத்துார் விழா 2025 லோகோ அறிமுகம்

கோவை;கோவையில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் கோவை விழாவின், 18வது பதிப்பு வரும் 14 முதல் 24ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன் லோகோ அறிமுக நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.கோவை மாநகரின் கலாசாரம், பாரம்பரியம், பன்முக சமூக உணர்வுகளைக் கொண்டாடும் விதமாக, கடந்த 17 ஆண்டுகளாக கோவையை சேர்ந்த பல்வேறு அமைப்பினரும், மக்களும் இணைந்து கோவை விழாவை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டின், 18வது பதிப்பு, 'இன்பினிட்டி எடிஷன்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது.கோவை புரூக் பீல்டு மாலில் நடந்த நிகழ்ச்சியில், கோவை எம்.பி., ராஜ்குமார், கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர், விழா லோகோவை அறிமுகம் செய்து வைத்தனர்.'கோயம்புத்துார் விழா 2025' - ன் தலைவர் சண்முகம் பழனியப்பன் கூறியதாவது:வரும், 14 முதல் 24ம் தேதி வரை, நடைபெறும் இந்த விழாவில், 150 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாக, கோவையில் முதல் முறையாக, 'ஸ்கை டான்ஸ்' புதிய நிகழ்ச்சி அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் நடக்கும்.இது 'லேசர் ப்ரொஜெக்ஷன் மேப்பிங்' என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் கோவை வரலாறு மற்றும் நகரின் வளர்ச்சிப் பயணத்தை காட்சிப்படுத்தும் விதமாக, தினமும் மாலை, 6:30 மணி முதல் கொடிசியா வளாக மைதானத்தில் நடைபெற உள்ளது. கோவை மக்கள் இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.-ஓவிய வீதி, கோவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா, பாரா விளையாட்டு மற்றும் சிறப்பு விளையாட்டுப் போட்டிகள், கோவை திறமையை வெளிப்படுத்தும் 'கோயம்புத்துார்ஸ் காட் டாலண்ட்' கோவை விழா மாரத்தான், இசை மழை, தி பிட்ச், பேரணி, விழா வீதி, வைப்ஸ் ஆப் செட்டிநாடு உள்ளிட்ட பல சிறப்பு நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.கோ-கார்ட் பந்தயம், ஆட்டோகிராஸ் சாம்பியன்ஷிப், கார் மற்றும் பைக் சாகச நிகழ்ச்சி, மோட்டார் பைக் பேரணியும் நடக்கவுள்ளது.பட்டிமன்றம், வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கண்காட்சி, பிக்கில்பால் போட்டி, பேரன்பு எனும் மூத்த குடிமக்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி, க்ரீன் அப் அண்ட் க்ளோ அப் கோவை எனும் துாய்மைப்பணி முயற்சி, மின் கழிவு சேகரிப்பு முயற்சி மற்றும் ரூப்பே ரெடி, குழந்தைகளுக்கான நிதி மேலாண்மை விழிப்புணர்வு என, பல நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.'யங் இந்தியன்ஸ்' -கோவை அமைப்பின் தலைவர் நீல் கிக்கானி மற்றும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் இதில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி