| ADDED : நவ 22, 2025 07:11 AM
கோவை: கோயம்புத்துார் விழா முன்னிட்டு, கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடத்தப்பட்டு வருகின்றன. கோயம்புத்துார் விழாவின் முக்கிய நிகழ்வான, ஓவிய வீதி கண்காட்சி, இன்று துவங்குகிறது. ரேஸ்கோர்ஸில் உள்ள அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் நடக்கும், இந்த கண்காட்சியில், இந்தியா முழுவதும் இருந்து, 100க்கு மேற்பட்ட ஓவியர்கள், தங்களின் ஓவிய படைப்புகளை, பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்துகின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான ஓவிய போட்டியும், பயிற்சியும் நடக்கிறது. காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும் இந்த கண்காட்சியை, பொதுமக்கள் பார்வையிடலாம். இந்த கண்காட்சி நாளை முடிவடைகிறது.