உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பற்றிக்கொண்டது கோவையை தேர்தல் ஜூரம்! கேமராவுடன் வாகனங்கள் ரெடி!

பற்றிக்கொண்டது கோவையை தேர்தல் ஜூரம்! கேமராவுடன் வாகனங்கள் ரெடி!

கோவை;லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் துவங்கி விட்டன. தேர்தல் பறக்கும் படைகளுக்கு வழங்கியுள்ள வாகனங்களில், 360 டிகிரி கோணத்தில் சுழலும் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தும் பணி, அரசியல் போஸ்டர்கள், தலைவர்களின் படங்களை அப்புறப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.லோக்சபா தேர்தல் பணிக்கு, கோவை மாவட்டத்தில், 30 பறக்கும் படைகள், 30 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 20 தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள், ஷிப்ட் முறையில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இக்குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.வாகனங்களின் இயக்கத்தை, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. 360 டிகிரி கோணத்தில் சுழலும் கண்காணிப்பு கேமரா வாகனங்களின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ளது; இது, சூரிய ஒளியில் இயங்கும் திறனுடையது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் அலுவலகம் உட்பட, அரசு துறை உயரதிகாரிகள் மற்றும் அனைத்து பிரிவு அலுவலகங்களில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.இதேபோல், அரசு துறை அலுவலகங்களில் இருந்த முதல்வர் படங்கள் தொடர்பான பிளக்ஸ் பேனர்கள் எடுக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகத்தில் புகைப்பட கண்காட்சியில் இருந்த, அனைத்து படங்களும் நேற்று உடனடியாக அகற்றப்பட்டன.அரசியல் கட்சியினர் எழுதியிருந்த சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி துவங்கியுள்ளது; போஸ்டர்கள் கிழிக்கும் பணி ஆங்காங்கே நடந்து வருகிறது; பிளக்ஸ் பேனர்கள் இருந்தால், அதையும் அகற்றி வருகின்றனர்.கட்சிக் கொடிக்கம்பங்களை, 24 மணி நேரத்துக்குள் அகற்ற, அரசியல் கட்சியினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அகற்றாவிட்டால், தேர்தல் பிரிவினர் அகற்றி, அதற்குரிய செலவினத்தை கட்சியினரிடம் வசூலிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை