உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துப்பறியும் மோப்ப நாய் பயிற்சி நிறைவு விழா

துப்பறியும் மோப்ப நாய் பயிற்சி நிறைவு விழா

கோவை : கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் தற்காலிக துப்பறியும் மோப்ப நாய் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு டிங்கோ, ருக்கி என்ற இரண்டு நாய்கள் கடந்த ஆறு மாதங்களாக பயிற்சி மேற்கொண்டன. இவற்றுக்கான பயிற்சி நிறைவு பெற்றதையடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி நேற்று சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து பயிற்சி பெற்ற நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. பயிற்சி நிறைவு செய்த இரண்டு நாய்களும், திண்டுக்கல் பகுதியில் பணியாற்ற போலீசார் அழைத்து செல்ல உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்