உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரிசர்வேசன் அலுவலகங்கள் எஸ்.ஆர்.எம்.யூ., கோரிக்கை

ரிசர்வேசன் அலுவலகங்கள் எஸ்.ஆர்.எம்.யூ., கோரிக்கை

கோவை : ''தகுதியான இ.சி.ஆர்.சி., ரயில்வே ஊழியர்களை கொண்டு ரிசர்வேசன் அலுவலகங்களை திறக்க வேண்டும்'' என தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.,) கோரிக்கை விடுத்துள்ளது.எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ரயில்வே ரிசர்வேசன் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இ.சி.ஆர்.சி., நிர்வாகி ரவிக்குமார் வரவேற்றார். எஸ்.ஆர்.எம்.யூ., தலைமை கிளை செயலாளர் ஜோன் செபஸ்டியன் தலைமை வகித்தார். கோட்ட துணை செயலாளர் நாகராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், ரிசர்வேசன் அலுவலகங்கள் மற்றும் எம்.பி., கள் விரும்பி அமைக்கும் ரிசர்வேசன் அலுவலகங்கள் எங்கு திறந்தாலும், அவற்றை தகுதியான இ.சி.ஆர்.சி., அலுவலர்களை கொண்டு திறக்க வேண்டும்.போத்தனூர் எஸ் அண்ட் டி பணிமனையில் நான்காம் பிரிவு ஊழியர்களை கொண்டு ரிசர்வேசன் அலுவலகத்தை திறக்கக் கூடாது. முறையான விவரங்களை அறிந்தவர் மட்டுமே இவற்றை செயல்படுத்த வேண்டும்.பயணிகளின் பயன்பாடு மற்றும் அவர்களின் நலன் கருதி போத்தனூரில் கூடுதலான ரிசர்வேசன் அலுவலகங்களை நியமிக்க வேண்டும். மேலும், நெட் ரிசர்வேசன் அலுவலகங்களை 24 மணி நேரமும் செயல்படுத்த வேண்டும். நெட் புக்கிங்குகளுக்கென தனிச் சலுகைகள் வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.எஸ்.ஆர்.எம்.யூ., மகளிர் அணி நிர்வாகி உமா மீனாட்சி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை