உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.என்.எஸ். கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

எஸ்.என்.எஸ். கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே உள்ள எஸ்.என்.எஸ்.ராஜலட்சுமி கலை, அறிவியல் கல்லூரியில், தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.கல்லூரியின் கம்ப்யூட்டர் துறை மேலாளர் புனிதவள்ளி தலைமை வகித்தார். முதல்வர் வேலுசாமி வரவேற்றார். சிறப்பு விருந் தினராக பங்கேற்ற பி.எஸ்.என்.எல்., நிர்வாக மேலாளர் ஹரிபாபு பேசுகையில்,'' கல்லூரி படிப்போடு, செய்முறை பயிற்சியையும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வப்போது துறை ரீதியான தொழிற்சாலைகளுக்கும், பணிமனைகளுக்கும் சென்று கம்ப்யூட்டர் துறை சார்ந்த தகவல், தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும்'' என்றார். கம்ப்யூட்டர் துறை தலை வர் பேராசிரியர் வைதேகி நன்றி கூறினார். கம்ப்யூட்டர் பயன்பாட்டு துறை தலை வர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ