| ADDED : ஆக 01, 2011 10:26 PM
அன்னூர் : அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அன்னூர் அரசு மருத்துவமனையில் டாக்டர், மருத்துவ உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், துப்புரவு பணியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. மருந்துகள் போதுமானது இல்லை. இரவு நேரத்தில் டாக்டர்கள் பணியில் இல்லை. இப்பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி நல்லிசெட்டிபாளையம் இளைஞர் நற்பணி மன்றம், ம.தி.மு.க., மற்றும் பாரதி சிந்தனையாளர் பணி மையம் சார்பில் அன்னூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மன்றத்தின் ஒன்றிய தலைவர் ஜோதிராம், செயலாளர் ஈஸ்வரன், பாரதி மைய நிறுவனர் கோபி, ம.தி.மு.க., நகரச் செயலாளர் பொன்விழிகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் காயமுள்ளதுபோல் தத்ரூபமாக கட்டுக்கள் போட்ட பள்ளி மாணவ, மாணவியர் சீருடையுடன் பங்கேற்றனர்.