| ADDED : ஆக 01, 2011 10:34 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில், புதிய குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு ஒரு கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், போலீசார் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் மற்றும் 12 குடியிருப்புகள் கடந்த 1920ம் ஆண்டு கட்டப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் குடியிருப்பு கட்டடங்கள் பழுதடைந்தன.இதில், போலீசாரும் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டு, போலீசார் கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் குடியிருந்து வருகின்றனர்.இந்நிலையில், கட்டடம் விழுந்துவிடும் சூழ்நிலை உருவானது. இதனை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு கடந்த ஐந்தாண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி கோவை ரூரல் எஸ்.பி.,க்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்கட்டமாக கடந்த ஆண்டு ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பதற்கு வசதியாக மூன்று கட்டடங்கள் 28 லட்சம் ரூபாய் செலவில் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 21 போலீசார் குடியிருப்பதற்கு வசதியாக ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது. இதனால், குடியிருப்பு கட்டடங்கள் கட்டும் பணி விரைவில் துவங்கயுள்ளதால், போலீசார் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.