உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலுமிச்சம்பட்டியில் திருவிளக்கு வழிபாடு

மலுமிச்சம்பட்டியில் திருவிளக்கு வழிபாடு

கோவை : கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் உள்ள ஸ்ரீ நாகசக்தி அம்மன் அருள்பீடத்தில், ஆடி விழாவை முன்னிட்டு, தீயசக்திகள் அழியவேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நடந்தது.கூட்டு வழிபாட்டு மன்ற தலைவி பாக்கியலட்சுமி, வழிபாடுகளை துவக்கி வைத்தார். உலக அமைதி, அன்பு, சமத்துவம், சமாதானம், தொழில் வளர்ச்சி பெருகிட வேண்டி சுமங்கலி பூஜை நடந்தது. அறக்கட்டளை தலைவர் சிவசண்முகசுந்தரபாபு, மாங்கல்ய பிரசாதங்களை பக்தர்களுக்கு வழங்கினார்.விழாவில், அறக்கட்டளை செயலாளர் வெங்கடநாராயணன், நிர்வாகி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை