உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / என்.சி.சி., பிரிவு துவக்கம்

என்.சி.சி., பிரிவு துவக்கம்

அன்னூர் : அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி., மாணவர் பிரிவு துவக்கப்பட்டது.அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளி துவக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இப்பள்ளியில் 2,500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் முதன்முறையாக தேசிய மாணவர் படை (என்.சி.சி.,) பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமையில், பெற்றோர் - ஆசிரியர் கழக நாராயணசாமி முன்னிலையில் விழா நடந்தது. புதியதாக அமைக்கப்பட்ட இப்பிரிவில் 50 பேர் பங்கேற்கின்றனர். ஆசிரியை சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை