உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் பற்றாக்குறையை போக்க மக்களிடம் சிக்கனம் தேவை

மின் பற்றாக்குறையை போக்க மக்களிடம் சிக்கனம் தேவை

சூலூர் : 'மின் பற்றாக்குறையை போக்க, மக்கள் மின் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்,' என, கோவை தெற்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அண்ணாதுரை பேசினார். சோமனூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கான, மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கான சிறப்பு முகாம் சோமனூரில் நடந்தது. சோமனூர் செயற் பொறியாளர் சுதாகர் வரவேற்றார். கோவை தெற்கு மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அண்ணா துரை தலைமை வகித்து பேசிய தாவது: மின் பற்றாக்குறை வரும் ஓரிரு மாதங்களில் படிப்படியாக குறையும். மின் உற்பத்திக்கேற்ப மின் பயன்பாடு இருக்க வேண்டும். மின் பற்றாக்குறை நிலவும் காலங்களில், மின் சிக்கனத்தை மக்கள் கடைபிடிக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக நடக்கும் பெயர் மாற்ற முகாமுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. கோவை தெற்கு கோட்டத் துக்கு உட்பட்ட குனியமுத்தூரில் 168 பேருக்கும், நெகமத்தில் 141 பேருக்கு சிறப்பு முகாம் மூலம் பெயர் மாற்றம் செய்யப்பட் டுள்ளது. மின் சிக்கனத்தை கடைபிடிக்க நினைக்கும் மின் நுகர்வோர், தரமான மின் சாதன பொருட்களை பயன்படுத்தினால் மின் கட்ட ணத்தை குறைக்க முடியும். நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் போது புவி வெப்பமடைகிறது. அதிகளவில் கரியமில வாயு வெளியாகிறது; சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதை தவிர்க்க மின் வாரியம் சார்பில், மின் நுகர்வோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு, அண்ணாதுரை பேசினார்.சோமனூர், கணியூர், சாமளா புரம்,வேலாயுதம்பாளையம், கருமத்தம்பட்டி, தெக்கலூர், வஞ்சிபாளையம், காடுவெட்டி பாளையம், அரசூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் மின் இணைப்பு பெயர் மாற்றம் கோரி விண்ணப்பித்தனர். உரிய ஆவணங்கள் இருந்தவர்களுக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்து, சான்றிதழ் மற்றும் மர க்கன்றுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை