உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / "குழுக்களுக்கு சேவை மனப்பான்மை அவசியம்

"குழுக்களுக்கு சேவை மனப்பான்மை அவசியம்

கோவை : குறிச்சி ரோஸஸ் மகளிர் சுய உதவிக்குழுவின் எட்டாவது ஆண்டு விழா குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நடந்தது. குறிச்சி ரோஸஸ் மகளிர் சுய உதவிக்குழு பிரதிநிதி இந்திராதேவி வரவேற்றார். நேர்டு தொண்டு நிறுவனத் தலைவி சத்தியஜோதி மரம் நட்டுவைத்து பேசியதாவது: இன்றைய வாழ்க்கை முறையில் தமக்காக மட்டுமல்லாமல் தம்மை சார்ந்தவர்களுக்கும், வேறு பகுதி மக்களும் பயன்பெறும் வகையில், ஆண்டுதோறும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல், குடியிருப்போர் சங்க அங்கத்தினருக்கு மரம் வளர்க்க நாற்று வழங்குதல், அனாதை ஆசிரம குழந்தைகளுக்கு அன்னதானம் மற்றும் புத்தகம் வழங்குதல், குழந்தைகள் கல்விக்கு மொத்த செலவையும் ஏற்று மற்ற மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு முன்மாதிரியாக செயல்படுவது பாராட்டத்தக்கது. சேவை மனப்பான்மையுடன் ஒவ்வொரு குழுவும் செயல்பட துவங்கினால், பிறருக்கு உதவும் மனித நேய பண்பும், குடும்ப உறுப்பினர்கள், உற்றார் மற்றும் உறவினர்களோடு இணைந்து செயல்படும் சிறந்த வாழ்க்கை முறை உருவாக வழிவகுக்கும். மேடை அமைத்து பல பேச்சாளர்களை பேசவைப்பதை விட, மரம் நடுதல், அனாதை ஆசிரமங்ளுக்கு உதவிகள் வழங்கி மற்றவர்களுக்கு சேவை செய்து விழா கொண்டாடுவது வரவேற்கத்தக்கது, என்றார். விழாவில், குழு உறுப்பினர்கள் நன்கொடையாக அளித்த 4000 ரூபாயை, சவுரிபாளையத்திலுள்ள சேவா மகளிர் காப்பகத்தின் சாப்பாடு மற்றும் ஏனைய செலவுகளுக்காக வழங்க தீர்மானிக்கப்பட்டது. குழு ஊக்குனர் ஜெயபாரதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்