| ADDED : ஜன 25, 2024 06:30 AM
கோவை : கோவை காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடம் கோவிலில் அங்காள பரமேஸ்வரி அம்மனின், 43ம் ஆண்டு திருக்கல்யாண மஹா உற்சவ குண்டம் பெருவிழா கடந்த, 22ம் தேதி விநாயகர் வேள்வியுடன் துவங்கியது.விழாவின் இரண்டாம் நாளான நேற்று முன் தினம் வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், முளைப்பாரி இடுதல், மஹா சரஸ்வதி வேள்வி, புஷ்ப பல்லக்கு உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. வரும், 28ம் தேதி வரை நடக்கும் விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நாளை வரை நடக்கிறது. அன்றைய தினம், 108 பால்குடம், மகா சக்தி வேள்வி மகா அபிஷேகம், பொங்கல் வைத்தல், மாரியம்மன் உற்சவம், மாவிளக்கு பூஜை, ஊஞ்சல் உற்சவம் இடம்பெறுகின்றன.ஒண்டிப்புதுார் அருகே, காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடக்கும் இவ்விழாவில், உலகில் அமைதி நிலவவும், மக்கள் நிறைவாக வாழவும், பல்வேறு பூஜைகள் தினமும் நடத்தப்படுகின்றன.