உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாசாணியம்மன் கோவிலில் பிப்., 9ல் குண்டம் விழா துவக்கம்

மாசாணியம்மன் கோவிலில் பிப்., 9ல் குண்டம் விழா துவக்கம்

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் வரும், பிப்., 9ம் தேதி கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா துவங்குகிறது.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.நடப்பாண்டு திருவிழா வரும் பிப்., 9ம் தேதி 9:30 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.பிப்., 22ம் தேதி நள்ளிரவு, 1:00 மணிக்கு மயான பூஜையும், 23ம் தேதி காலை, 9:30 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் சக்தி கும்பஸ்தாபனம், மாலை, 6:30 மணிக்கு மகா பூஜை நடக்கிறது. 24ம் தேதி காலை, 7:30 மணிக்கு மேல், 8:30 மணிக்குள் குண்டம் கட்டுதல், மாலை, 6:30 மணிக்கு சித்திரை தேர் வடம் பிடித்தல், இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.பிப்., 25ம் தேதி காலை, 6:00 மணிக்கு மேல், 7:00 மணிக்குள், குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், 26ம் தேதி காலை, 6:30 மணிக்கு மேல், 7:30 மணிக்குள் கொடி இறக்குதல், காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீராடல், இரவு, 8:00 மணிக்கு மகாமுனி பூஜை நடக்கிறது. 27ம் தேதி மகா அபிேஷகம், அலங்கார பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை