உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இழப்பீடு இழுத்தடிப்பு; 4 அரசு பஸ்கள் ஜப்தி

இழப்பீடு இழுத்தடிப்பு; 4 அரசு பஸ்கள் ஜப்தி

மேட்டுப்பாளையம்:சாலை விபத்து வழக்கில் இழப்பீடு தராதை அடுத்து, நான்கு அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.மேட்டுப்பாளையம், ஜடையம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி,55; கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2015ம் ஆண்டு, ஆக., 14ல், மேட்டுப்பாளையம்- - அன்னுார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஈரோட்டில் இருந்து ஊட்டி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கந்தசாமி பலியானர். இதுதொடர்பான வழக்கு மேட்டுப்பாளையம் சார்ப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணை முடிந்து, கந்தசாமியின் மனைவி கிருஷ்ணவேணிக்கு ரூ. 17 லட்சம் இழப்பீட்டை, தமிழக அரசு போக்குவரத்து கழகம் தர வேண்டும் என, நீதிபதி கெங்கராஜ் உத்தரவிட்டார்.கடந்த ஆண்டு உத்தரவிட்ட நிலையில், அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தராததை அடுத்து மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான, நான்கு அரசு பஸ்களை நீதிமன்ற உத்தரபின் படி, நீதிமன்ற அலுவலர் முனிராஜ் மற்றும் வக்கீல்கள் ஜப்தி செய்தனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ