உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்திய போட்டி ஆணையத்தின் பணி சைமா ஏற்படுத்தியது விழிப்புணர்வு

இந்திய போட்டி ஆணையத்தின் பணி சைமா ஏற்படுத்தியது விழிப்புணர்வு

கோவை;சைமா (தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்) சார்பில், 'ஜவுளிச்சந்தையில் போட்டி' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, ரேஸ்கோர்ஸிலுள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில், சைமா தலைவர் சுந்தர்ராமன் பேசுகையில், ''இந்திய போட்டி ஆணையம், தொழில்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் நலனை பாதுகாப்பதில், முக்கிய பங்கு வகிக்கிறது. சந்தையில் பங்குதாரர், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் கடைபிடிக்காததை உறுதி செய்கிறது,'' என்றார்.இந்திய போட்டி ஆணையத்தின், தென்னக சட்ட இணை இயக்குனர் ஸ்ரீராஜ் பேசுகையில், ''போட்டி சட்டத்தின் வரம்பிற்குள் உள்ள, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை அகற்றுவதற்கும், நடைமுறைகளை எளிதாக்குவதற்கும், சிக்கல்களை தீர்க்க முன்னுரிமை அளிப்பதற்கும், அதிகபட்ச ஆட்சி; குறைந்தபட்ச அரசாங்கம் என்ற நோக்கத்துடன், ஆணையம் செயல்படுகிறது.நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களின் நலனுக்காக, ஆணையம் தொடர்ந்து பாடுபடும். போட்டிச்சட்டம் 2002, ஆதிக்க வணிகர்களின் தவறான, நியாயமற்ற வர்த்தகத்தை தடை செய்து அபராதம் விதிக்க வழி செய்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி