| ADDED : ஜன 12, 2024 09:00 PM
கோவில்பாளையம்;எஸ்.எஸ்.குளம் விவசாயி பொன்னுச்சாமி தலைமையில், விவசாயிகள், எஸ்.எஸ்.குளம் வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:வேளாண் விரிவாக்க அலுவலகத்திற்கு விவசாயிகள் வருவதற்கும், தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கும், அலுவலக பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஒட்டி இடம் உள்ளது. தற்போது கேன்டீன் என்ற பெயரில் அங்கு ஓட்டல் செயல்படுவதால், விவசாயிகள் வாகனங்களை ரோட்டில் நிறுத்த வேண்டி உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பாதுகாப்பாற்ற நிலை உள்ளது.மேலும் அலுவலக வளாகத்திற்கு உள்ளே ஹோட்டல் செயல்படுவதால் ஓட்டலுக்கு வருவோரின் வாகனங்களும் சாலையில் நிறுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே கோரிக்கைக்காக எஸ்.எஸ்.குளம் பேரூராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது.