உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெடிமருந்து பறிமுதல்; போலீசார் சோதனை

வெடிமருந்து பறிமுதல்; போலீசார் சோதனை

கோவை, : கோவையில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஐந்து டன் பொட்டாசியம் குளோரைடு சிக்கியது. இருவர் கைது செய்யப்பட்டனர்.கோவை மாநகர போலீசாருக்கு நேற்று, பேரூர் அடுத்து சென்னனூர் பகுதியில் வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, தகவல் கிடைத்தது. துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில், உதவி கமிஷனர் ரகுபதிராஜா மற்றும் போலீசார், சென்னனூரை சேர்ந்த வேலுசாமி, 65 (ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர்) என்பவருக்கு, சொந்தமான தோட்டத்தில், சோதனை நடத்தினர். இதில் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் உரம் பொட்டாசியம் குளோரைடு, 50 மூட்டைகளில், ஐந்து டன் இருப்பது தெரிந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் அங்கிருந்த கரும்புக்கடை, ஆசாத் நகரை சேர்ந்த முஹமது அர்ஷாத், 33, இதயத்துல்லா, 33 ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், ஆன்-லைனில் வெடிபொருட்கள் விற்பதாக கூறி, பலரிடம் மோசடி செய்திருப்பது தெரிந் தது. தொடர்ந்து இருவரிடமும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை