கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி துவக்கம்
கோவை; கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், நடப்பு கல்வியாண்டில், முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி துவக்க விழா நடந்தது. குறைந்தபட்ச கல்வி தகுதியாக, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், 3 வருட பட்டயப்படிப்பு (டிப்ளமோ) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் www.tncu.tn.gov.inவழியாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். பயிற்சியில் சேர, 01.07.2025 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மாணவர்களின் வருகை பயோ மெட்ரிக் முறையில் மட்டுமே 100 சதவீதம் பதிவு செய்யப்படும். புதிய பாடத்திட்டத்தின்படி, கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி ஒரு வருட கால பயிற்சியாக, இரண்டு பருவ முறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜூலை 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், முதற்கட்ட சேர்க்கையை, மண்டல இணைப்பதிவாளர் அழகிரி துவக்கி வைத்தார். ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய துணை பதிவாளர் மற்றும் முதல்வர் கீதா, ஓய்வு பெற்ற துணைப்பதிவாளர்கள் கவுரவம் ராஜ், சிவகாமி, ஓய்வு பெற்ற கூட்டுறவு சார் பதிவாளர் சிவக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர். கோவையில் 140 பேரும், ஊட்டியில் 40 பேரும் சேர்ந்துள்ளனர். இரண்டாவது பேட்ச்சுக்கான விண்ணப்பங்கள் வரும், 22ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதியில் இருந்து இவர்களுக்கு வகுப்புகள் துவங்க உள்ளது.