உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 5,460 மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி தரமானதாக தயாரிக்க மாநகராட்சி உத்தரவு

5,460 மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி தரமானதாக தயாரிக்க மாநகராட்சி உத்தரவு

கோவை;மாநகராட்சி பள்ளிகளில், 5,460 மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பின் போது சிற்றுண்டி வழங்கப்படும் நிலையில் உரிய நேரத்துக்கு தரமாக தயாரித்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 42 துவக்கப் பள்ளிகள், 11 உயர்நிலை, 14 நடுநிலை மற்றும், 17 மேல்நிலைப்பள்ளிகள் என, 84 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளால், 2023-24ம் கல்வியாண்டில், 3,263 மாணவியர், 2,727 மாணவர்கள் என, 5,990 பேர் கூடுதலாக சேர்க்கை புரிந்துள்ளனர்.தவிர, பொதுத் தேர்வு நெருங்கும் நிலையில் பத்தாம் வகுப்பில், 2,059 மாணவர்கள், பிளஸ்2 வகுப்பில், 1,644 மாணவர்களுக்கு என, தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வியில், பாடவாரியாக மொத்தம், 24 ஆயிரத்து, 102 கற்றல் கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன.வரும் மார்ச்-ஏப்., மாதங்களில் நடைபெறும் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள தயார் செய்யும் பொருட்டு, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன. இதற்கு முன், சிற்றுண்டி வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.மாநகராட்சி கல்வி பிரிவினர் கூறியதாவது:மாலை நேர சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறுதானியங்கள் உள்ளிட்ட சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. 11ம் வகுப்பு பயிலும், 1,751 மாணவ, மாணவியருக்கும் இச்சிற்றுண்டி அளிக்கப்படும். படிக்கும் சமயத்தில் பசியால் மாணவர்களின் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக, வகுப்பு துவங்கும் முன்பே இவை வழங்கப்படும்.சிற்றுண்டி தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும். உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும். பின்விளைவுகள் ஏற்படாத வகையில், பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, உணவு வினியோகத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள், சிற்றுண்டி தயாரிப்பு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ