உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கேரம் போட்டியில் அபாரம்

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கேரம் போட்டியில் அபாரம்

கோவை: பாரதியார் தின விளையாட்டு போட்டியில், பீளமேடு மாநகராட்சி பள்ளி மாணவர்கள் இருவர், கேரம் போட்டியில் பதக்கங்கள் குவித்து, பெருமை சேர்த்துள்ளனர்.தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில், மாநில அளவில் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள், ராணிப்பேட்டை மாவட்டம் ஆரப்பாக்கத்தில் நடந்தது. இதில், 14 வயதுக்கு உட்பட்டோர் கேரம் ஒற்றையர் போட்டியில், பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் பரணிதரன், மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.இரட்டையர் போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பரணிதரன் மற்றும் ஹர்ஷித் ஆகியோர் மாநில அளவில் நான்காம் இடம் பெற்றுள்ளனர். மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், கமிஷனர் சிவகுரு பிரபாகரனை சந்தித்து மாணவர்கள் இருவரும் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன், பள்ளி தலைமையாசிரியர் தாமஸ் சேவியர், உடற்கல்வி ஆசிரியை ராதாமணி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை