உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட கால்பந்து; சிறுவர்கள் அசத்தல்

மாவட்ட கால்பந்து; சிறுவர்கள் அசத்தல்

கோவை;செல்வபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில், மாணவர்கள் அசத்தலாக விளையாடி வெற்றி பெற்றனர்.பள்ளி மாணவர்கள் மற்றும் அகாடமி மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி, டிரீம் லைட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் பி.டி.பி., நிறுவனம் சார்பில், செல்வபுரம் கிராஸ்பார் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் மைதானத்தில், நேற்று முன்தினம் நடந்தது.மாணவர்களுக்கு, 10, 12, 14, 16 ஆகிய வயது பிரிவின் அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியில், 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.இதன் 10 வயது பிரிவு இறுதிப்போட்டியில், பிரைடு எப்.சி., முதலிடம், ஒலிம்பியா எப்.சி., இரண்டாமிடம்; 12 வயது பிரிவில் பிரைடு எப்.சி., முதலிடம், 5ஸ் கிரு இரண்டாமிடம்; 14 வயது பிரிவில் பிரைடு எப்.சி., முதலிடம், 5ஸ் கிரு இரண்டாமிடம்; 16 வயது பிரிவில் டி.எப்.எஸ்.சி., முதலிடம், எம்.எப்.சி., இரண்டாமிடம் பிடித்தன.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி