|  ADDED : ஜன 16, 2024 11:24 PM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
கோவை;மாவட்ட அளவிலான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், அப்பாசாமி கிரிக்கெட் கிளப் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'காசா கிராண்ட்' கோப்பைக்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், அப்பாசாமி கிரிக்கெட் கிளப் மற்றும் ஸ்ரீ கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. பீளமேடு பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஸ்ரீ கிரிக்கெட் கிளப் முதலில் பேட்டிங் செய்தது.பொறுமையாக விளையாடிய ஸ்ரீ கிரிக்கெட் அணி வீரர்கள், 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 133 ரன்கள் சேர்த்தனர்.அணியின் கேப்டன் ஆன்டனி பெர்னார்டு 31 ரன்கள் அடித்தார். அப்பாசாமி கிரிக்கெட் அணியின் சவுந்தர் ராஜ் சிறப்பாக பந்து வீசி, நான்கு விக்கெட்கள் கைப்பற்றினார். அடுத்து விளையாடிய அப்பாசாமி அணி, 46.5 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.ஸ்ரீ கிரிக்கெட் கிளப் அணியின் கணேஷ் பெருமாள் அசத்தலாக பந்து வீசி, ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.