| ADDED : செப் 08, 2026 04:42 PM
உரிமம் கோராத 74 பைக் பறிமுதல் சிங்காநல்லுார்: சிங்காநல்லுார் போலீசார் பல இடங்களில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 74 பைக்குகளை கைப்பற்றினர். யாரும் உரிமை கோரவில்லை. போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் அத்துமீறல் செல்வபுரம்: முத்துசாமி காலனியை சேர்ந்தவர் ரஞ்சனி. இவர் இரவில் வீட்டில் இருந்த போது முகமது ரபீக் என்பவர் குடிபோதையில் அத்துமீறி ரஞ்சனி வீட்டுக்குள் நுழைந்தார். அவர் கூச்சலிட்டதால், பக்கத்து வீட்டார் ஓடிவந்து அத்துமீறிய நபரை பிடித்தனர். புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மனைவி செயினை பறித்த கணவன் கணபதி: நேரு நகரை சேர்ந்தவர் ராஜேஷ்,33. மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். மது குடிக்க மனைவி பிரேமாவிடம் பணம் கேட்டபோது கொடுக்க மறுத்தார். தாலி செயினை பறித்தார். தடுத்தபோது தாக்கினார். ஜன்னல் கதவை அடித்து நொறுக்கினார். புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் ராஜேைஷ கைது செய்தனர். புகையிலை பறிமுதல் ஆர்.எஸ்.புரம்: லாலி ரோட்டிலுள்ள மளிகை கடையில் போலீசார் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற உரிமையாளர் வரதராஜை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். * கவுண்டம்பாளையம், இடையர்பாளையம் ரோட்டிலுள்ள பெட்டிக்கடையில் விற்ற புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் ஜெயகுமாரை கைது செய்து ஜாமினில் விடுவித்தனர். மது குடித்தவர்கள் மீது வழக்கு கோவை: ஆர்.எஸ்.புரம், ரத்தினபுரி, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் பொது இடத்தில் மது குடிப்பவர்களை பிடிக்க போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மது குடித்த மோகன்ராஜ், ஆறுமுகம், அஜித்குமார், மோகனசுந்தர், பாரதிராஜா, சுரேஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.