மேலும் செய்திகள்
சிட்டி கிரைம்
17-Jan-2025
மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் வசித்து வருபவர் பிரியா, 30. இவர் தனது கணவருடன் அங்கு வசித்து வருகிறார். இதனிடையே கடந்த 17ம் தேதி பிரியா தனது சொந்த ஊரான சிறுமுகை வச்சினம்பாளையத்திற்கு வந்தார். அப்போது தனது மூத்த சகோதரி தேவி வீட்டில் அமர்ந்திருந்த போது, அவ்வழியாக அதே ஊரை சேர்ந்த குமார் என்பவர் ரோட்டில் பைக்கில் வந்த போது, தானாக நிலை தடுமாறி கீழே விழுந்தார்.இதுதொடர்பாக குமாரின் உறவினர்களான வேணுகோபால், 23, சின்ராஜ், செந்தில் மற்றும் குமார் ஆகியோர், தேவியின் வீட்டுக்கு வந்து, தேவியை தகாத வார்த்தைகளால் திட்டி, பைக்கில் இருந்து கீழே விழுந்த குமாரை தாக்கியதாக கூறி கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுதொடர்பாக பிரியா அளித்த புகாரின் பேரில், சிறுமுகை போலீசார் வழக்குப் பதிவு செய்து, நேற்று வேணுகோபாலை கைது செய்தனர். மற்ற மூவரை தேடி வருகின்றனர். சீட்டு விளையாடிய 5 பேர் மீது வழக்கு
மேட்டுப்பாளையம் அருகே வேளாங்கண்ணி பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடிய சிவன்புரம் காலனியை சேர்ந்த தினேஷ், 41, காந்திபுரம் 4வது வீதியை சேர்ந்த சந்துரு, 25, பாரத் பவன் பகுதியை சேர்ந்த அர்ஜூன், 39, அதே பகுதியை சேர்ந்த சிவ சந்திரன், 29, ராமச்சந்திரன், 35, ஆகியோரை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகளையும் ரூ.61 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து, 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ----அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு
கவுண்டம்பாளையம் ராமசாமி நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பொங்கலை ஒட்டி பள்ளிக்கு கடந்த, 14ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. பள்ளி திறக்கப்பட்டவுடன் பள்ளியின் ஸ்டோர் ரூம் அறையின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் கீ போர்டுகள், சி.பி.யூ., 3 மானிட்டர்கள் திருடு போயிருந்தன. பொங்கல் விடுமுறை நாளில் பள்ளி வளாகத்தில் நுழைந்த நபர்கள் பூட்டை உடைத்து, கம்ப்யூட்டர்களை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து, கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
17-Jan-2025