உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடன் தொல்லை; பெண் தற்கொலை

கடன் தொல்லை; பெண் தற்கொலை

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலை தேவைய்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் அகமது, 39, இவருக்கு சர்மிளா பானு, 33, என்ற மனைவியும், மூன்று ஆண் குழந்தைகளும் உள்ளனர். ரியாஸ் அகமது கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.இந்நிலையில் இவர் கடந்த ஆறு மாதங்களாக வேலையில்லாமல் இருந்ததால், வெளி நபரிடம் கடன் பெற்று குடும்பத்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கடன் நெருக்கடி காரணமாக சர்மிளா பானு மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் ரியாஸ் அகமது வீட்டில் இல்லாத நேரத்தில், சர்மிளா பானு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை