உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கஞ்சப்பள்ளியில் சமுதாய கூடம் கட்ட முடிவு

 கஞ்சப்பள்ளியில் சமுதாய கூடம் கட்ட முடிவு

அன்னூர்: கஞ்சப்பள்ளி ஊராட்சி, தாச பாளையத்தில், 160 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் சமுதாய நலக்கூடம் இல்லாததால் இப்பகுதி மக்கள் அதிக தொகை செலவழித்து சுப காரியங்கள் நடத்த வேண்டி உள்ளது. சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டுமென சமூக ஆர்வலர் சதீஷ்குமார், அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், 'வரும் நிதியாண்டில் கஞ்சப்பள்ளி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கலெக்டரிடம் அனுமதி பெற்று சமுதாய நலக்கூடம் கட்டப்படும்,' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை