உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நேந்திரன் பழ விலை சரிவு :செவ்வாழை விலை உயர்வு

நேந்திரன் பழ விலை சரிவு :செவ்வாழை விலை உயர்வு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு மார்க்கெட்டில், வாழைத்தார் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தென்னை சாகுபடியில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். நேந்திரன் சிப்ஸ் தயாரிப்புக்காக, நேந்திரன் ரக வாழையை அதிகம் சாகுபடி செய்துள்ளனர்.இதனால், தினசரி மார்க்கெட்டில் காய்களுக்கு அடுத்தபடியாக வாழைத்தார் வரத்து உள்ளது. இங்கு உடனடியாக வாழைத்தார் விற்பனை ஆவதால், மார்க்கெட்டுக்கு அதிகளவில் வாழைத்தார் கொண்டு வருகின்றனர்.கிணத்துக்கடவு மார்க்கெட்டில், தற்போது வாழைத்தார் வரத்து மிதமாக உள்ளது. விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.வியாபாரிகள் கூறுகையில், 'நேந்திரன் கிலோ - 16 ரூபாய், கதளி - 30, பூவன் - 36, சாம்பராணி - 30, செவ்வாழை - 50 ரூபாய்க்கு விற்பனை ஆனது.கடந்த வாரத்தை விட தற்போது, நேந்திரன் வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளதால், நேந்திரன் பழம் மட்டும் கிலோவுக்கு 4 ரூபாய் விலை குறைந்துள்ளது. பூவன் - 16, செவ்வாழை - 10, கதளி மற்றும் சாம்பராணி வகை பழங்கள் - 5 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ