உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நலவாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நலவாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

குடிமங்கலம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், குடிமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி, இ.கம்யூ., புறநகர் மாவட்ட துணைச்செயலாளர் ரவி, தாலுகா செயலாளர் சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பேசினர்.விவசாய தொழிலாளர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள உழவர் பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்து விட்டு, கடந்த, 1996 - 2001ல், நடைமுறையில் இருந்த விவசாய தொழிலாளர் நல வாரியத்தை ஏற்படுத்த வேண்டும்.தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வேலை செய்த தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை