உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர்- பள்ளி வழிகாட்டி கோலாகலமாக துவக்கம்: இன்றே கடைசி; அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

தினமலர்- பள்ளி வழிகாட்டி கோலாகலமாக துவக்கம்: இன்றே கடைசி; அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

கோவை:'தினமலர்' மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும், பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சியை, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், நேற்று துவக்கி வைத்தார்.அவிநாசி ரோடு, சுகுணா கல்யாண மண்டபத்தில் நடக்கும் இந்நிகழ்ச்சி, இன்றுடன் நிறைவடைவதால், உங்கள் குழந்தைக்கு ஏற்ற பள்ளியை, தேர்வு செய்யும் அரிய வாய்ப்பை, பெற்றோரே மிஸ் பண்ணிடாதீங்க.உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முதல்படி, பள்ளியில் இருந்து தான் துவங்குகிறது. பள்ளியின் கற்றல் சூழல், கற்பித்தல் முறைகள், உடன் படிக்கும் குழந்தைகளின் அறிவுத்தேடல், ஆசிரியர்களின் வழிகாட்டுதல், வகுப்பறை தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள், ஒரு குழந்தையின் பள்ளிக்கால வாழ்விற்கான அஸ்திவாரங்களாக உள்ளன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, பள்ளிக்கல்விக்கான அடித்தளத்தை, கொங்கு மண்டலத்தில் உள்ள தலைசிறந்த பள்ளிகளில் இருந்து, துவங்க வேண்டுமென்பதற்காக, 'தினமலர்' நாளிதழ், பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்துகிறது.அவிநாசி ரோடு, சுகுணா கல்யாண மண்டபத்தில் நேற்று துவங்கிய, இந்நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட அரங்குகள் இருப்பதால், அந்தந்த பள்ளியில் பின்பற்றப்படும் சிலபஸ், கற்றல் முறைகள், கற்பித்தல் தொழில்நுட்பங்கள், கல்விசாரா செயல்பாடுகள், கட்டண விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை, பெற்றோர் கேட்டறியலாம். ப்ரீ.கே.ஜி., முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஸ்பார்ட் அட்மிஷன் உறுதி செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளியாக ஏறி இறங்கி, சிறந்ததை தேர்வு செய்வதற்கு பதிலாக, ஒரே கூரையின் கீழ், தலைசிறந்த பள்ளிகள் சங்கமித்துள்ளதால், குடும்பத்தோடு வந்து, சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். அரங்குக்கு வரும் குழந்தைகளை வரவேற்க, செல்பி கார்னர், டோரா, மிக்கி மவுஸ், ஸ்மைலி போன்ற கார்ட்டூன் வேடமணிந்தவர்கள், டான்ஸ் பாய்ண்ட் உள்ளது. இறுதிநாளான இன்று காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடப்பதால், பெற்றோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். அனுமதி இலவசம் என்பதால், இந்த வாரத்தின் இறுதிநாளான இன்று, உங்கள் குழந்தைகளின் கல்வி பயணத்திற்கு ஒதுக்கலாம்.நிகழ்ச்சியில், 'பவர்டு பை ஸ்பான்சராக' நேஷனல் மாடல் குரூப் ஆப் பள்ளிகள் உள்ளது. மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளி, ஆதித்யா வித்யாஸ்ரம், சந்திரமாரி இன்டர்நேஷனல் பள்ளி, சமஸ்டி இன்டர்நேஷனல் பள்ளி ஆகியவை நிகழ்ச்சியை இணைந்து வழங்குகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி