உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சி பணியாளர் சங்க கூட்டம்

ஊராட்சி பணியாளர் சங்க கூட்டம்

பொங்கலூர் : தமிழ்நாடு ஊராட்சி பணியாளர் நலச்சங்க கூட்டம், பொங்கலூரில் நடந்தது. மாநில தலைவர் பாலு தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், 'தமிழகத்தில் உள்ள 12,620 ஊராட்சிகளிலும் குடிநீர், சுகாதார பணியாளர்களுக்கு நான்கு மாதமாக வழங்காமல் உள்ள மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். ஆறாவது ஊதியக்குழு ஊதிய உயர்வு நிலுவையை உடனே வழங்க வேண்டும்.'பணியாளர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு நிலுவை தொகை வழங்காத ஊராட்சிகளை கண்டித்து, மாத இறுதியில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்வது,' என்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய நிர்வாகிகள் அருணாசலம், குப்புசாமி, முத்துசாமி மற்றும் குடிநீர், மின் மோட்டார், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை