உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 11 மாட்டு வண்டிகள் பறிமுதல்

11 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆனைமலை : ஆனைமலை பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 11 மாட்டு வண்டிகளை வருவாய்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனைமலை அடுத்த ஆற்றுப்படுகைகளில் தொடர்ந்து மணல் கடத்தலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க வருவாய்த்துறையினர் தனிப்படை அமைத்து நேற்றுமுன்தினம் காலை 6.30 மணிக்கு ஆனைமலை அடுத்த மாணிக்கமூலை பகுதியில் 9 மாட்டு வண்டிகளும், காளியாபுரம் பகுதியில் இரண்டு மாட்டுவண்டிகளும் பறிமுதல் செய்தனர். கிராம நிர்வாக அலுவலர்கள் அருண், உதயகுமார், காளிமுத்து, செல்வானந்தம், சரவணன் ஆகியோர் மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். இவை ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனில் வருவாய் ஆய்வாளர் விக்டர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. மணல் கடத்தலை முற்றிலுமாக தடுத்து இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ