உள்ளூர் செய்திகள்

இளைஞர் காங்., கூட்டம்

வால்பாறை : வால்பாறை வட்டார நகர இளைஞர் காங்., நிர்வாகிகள் கூட்டம் தலைவர் சுதாகர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவி இளைஞர் காங்.,க்கு ஒதுக்க வேண்டும் என்றும், கூட்டத்தில் தேர்தல் குறித்த முக்கிய முடிவுகளை கட்சியில் மாநிலத்தலைவர் யுவராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., கோவைதங்கம் ஆகியோர் முன்னிலையில் முடிவு செய்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் ராஜமாணிக்கம், வட்டாரத்தலைவர்கள் முத்துப்பாண்டி, சேரன்தங்கசாமி, நகரத்தலைவர் வசந்தம் காளிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி