| ADDED : செப் 18, 2011 09:45 PM
கோவை : பாரதியார் பல்கலை அனைத்து கல்லூரிகளுக்கான வலு தூக்குதல் போட்டியில்
மாணவர்கள் அசத்தலாக தங்கள் முழு திறமைகளையும் வெளிப்படுத்தினர். பாரதியார்
பல்கலை அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான 'வலு தூக்குதல் சாம்பியன்ஷிப்'
போட்டி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நடந்தன.
முதல் 2 நாட்களில் மாணவியருக்கான பளு தூக்குதல், வலு தூக்குதல் போட்டிகள்
நடந்தன. போட்டியை கல்லூரி முதல்வர் பாலுச்சாமி துவக்கினார். மாணவர்களுக்கான
வலு தூக்கும் போட்டியில் 22 கல்லூரிகளை சேர்ந்த 182 மாணவர்கள் 'டெட்
லிப்ட்', 'பெஞ்ச் பிரஸ்', 'புல் ஸ்குவாடு' என்ற வகையில் 11 பிரிவு உடல்
எடை(கிலோ) மூலம் போட்டியில் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3
இடங்களை பெற்றவர்கள்: 56 கிலோ: யுவராஜ் (பாரதியார் பல்கலை), விக்னேஷ்
(பி.எஸ்.ஜி.,கலை அறிவியல் கல்லூரி), சேதுபதி (ஈரோடு கலை கல்லூரி) 60 கிலோ:
ஸ்டாலின் (பாரதியார் பல்கலை), விஷ்ணு (கூடலூர் அரசு கல்லூரி),
சுமேஷ்குமார்(எஸ்.டி.,கல்லூரி) 67.5 கிலோ: தர்மராஜ் (வி.எல்.பி.,
ஜானகிஅம்மாள் கல்லூரி), கலைவாணன் (பாரதியார் பல்கலை), பிரசாந்த்
(பாரதிதாசன் கல்லூரி).