உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காதல் "மொழி மறந்த கணவனுக்கு சிறை :பேசாத பெண்ணின் வாக்குமூலம் ஏற்பு

காதல் "மொழி மறந்த கணவனுக்கு சிறை :பேசாத பெண்ணின் வாக்குமூலம் ஏற்பு

கோவை : வாய் பேச முடியாத, காது கேளாத பெண்ணை காதலித்து திருமணம்செய்த பின், வரதட்சணையாக 25 சவரன் நகை கேட்டு துன்புறுத்திய கணவனுக்கு கோவை கோர்ட் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. குனியமுத்தூரைச் சேர்ந்த அய்யாசாமியின் மகன் செந்தில்குமார்(25); சலூன் நடத்தி வருகிறார். கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் தீபா(21); இருவரும் உறவினர்கள். தீபாவை காதலித்த செந்தில்குமார், திருமணம் பற்றி பேச்சு வந்த போது, அதற்கு மறுத்து விட்டார். ஏமாற்றமடைந்த தீபா கொடுத்த புகாரின் பேரில், இவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் விளைவாக, தீபாவை திருமணமும் செய்து கொண்டார் செந்தில்குமார். சில மாதங்கள் குடும்பம் நடத்தியவர், மனைவி தீபாவை எப்படியும் கழற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் ரொக்கமும், 25 சவரன் நகையும் வரதட்சணையாக வாங்கி வர வேண்டும் என வற்புறுத்தி, வீட்டில் அடைத்து சித்ரவதை செய்து வந்தார். மனைவியை வெளியாட்கள் யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக வீட்டிக்குள் பூட்டி வைத்தார். கடந்த 2008ல் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் உதவியால் அங்கிருந்து தப்பி, ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார் விசாரித்தினர்; வாய் பேச முடியாத மனைவியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவரை கைது செய்தனர். இவ்வழக்கு ஜே.எம்.எண்:1 கோர்ட்டில் நடந்தது. வாய் பேச முடியாத தீபாவிடம் வாக்கு மூலம் பெற முடிவு செய்த கோர்ட், இதற்காக ஆர்.எஸ். புரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியின் தலைமை யாசிரியை தமிழ்ச் செல்வி அழைக்கப் பட்டார். தீபா சைகையால் தெரிவித்த குற்றச்சாட்டுகளை தமிழ்ச்செல்வி எடுத்துக்கூற கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தி, குற்றம் சாட்டப்பட்ட மாற்றுத் திறனாளியின் கணவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சைகையால் வாக்கு மூலம் பெற்று, கண வருக்கு தண்டனை வழங் கியது கோவையில் இதுவே முதல்முறை யாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ